கம்பராமாயணம் 7744 · யுத்த 16.68

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாயினும் கடைப்பட்டோனே - நாயினை விடக் கீழ்மைப் பட்டவனே! வரிசிலை ஒருவன் அல்லால் - கட்டமைந்த வில்லேந்திய ஒப்பற்ற இராமபிரான் அல்லாமல்; என் மருங்கு வந்தார் மைந்தர் - என் பக்கலில் வந்த (வேற்று) ஆடவர்கள்; எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ - விளக்கு எரியில் விழுந்த விட்டில் பூச்சிபோல் உயிர் அழிவர் அல்லவா? அரசுக்கு ஏற்ற அரியொடும் வாழ்ந்த பேடை - விலங்குகளின் அரசனாகும் தன்மை உடைய ஆண் சிங்கத்தோடு வாழ்ந்த ஒரு பெண் சிங்கம்; அங்கணத்து அழுக்குத் தின்னும் - புழக்கடையில் அழுக்கைத் தேடித் தின்னும்; நரியொடும் வாழ்வது உண்டோ - நரியுடன் கூடி வாழ்வது எங்கேனும் உண்டோ?

தந்தையை நாயினும் கடைப்பட்டோன் எனச் சினந்தும் வெறுத்தும் கூறுகிறாள். விட்டில் - விளக்குப் பூச்சி என்பர். அங்கணம் - தூய்மை இல்லாத முற்றம், புழக்கடை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Except for the one with the banded bow, the men who came near me,
  2. are they not moths that fell into the flame? The lioness that lived
  3. with a lion fit for kingship, does she ever live with a jackal
  4. that eats the filth of the backyard? You who are lower than a dog!”

What the poem says

Cītai calls the false Caṉakaṉ lower than a dog. Any man other than Irāmaṉ who comes near her, she says, perishes like a moth in a flame. A lioness who has lived with the lion, king of beasts, will never live with a jackal that scavenges filth in a backyard. The lion is Irāmaṉ, the jackal Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vari cilai oruvaṉ allāl, maintar eṉ maruṅku vantār
eriyiṭai vīḻnta viṭṭil allarō? aracukku ēṟṟa
ariyoṭum vāḻnta pēṭai, aṅkaṇattu aḻukkut tiṉṉum
nariyoṭum vāḻvatu uṇṭō? nāyiṉum kaṭaippaṭṭōṉē!