கம்பராமாயணம் 7745 · யுத்த 16.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எந்தை அல்லையே - (இத்தகு இழி சொற்களைக் கூறிய நீ) என் தந்தை அல்லை; ஆனாய் ஆகதான் - (அவ்வாறு நீ என் தந்தை) ஆனாலும் ஆக; அலங்கல் வீரன் வில்லையே வாழ்த்தி - வெற்றி மாலையணிந்த வீரனாகிய இராமபிரானது வில்லையே வாழ்த்திக் கூறி; மீட்கின் மீளுதி - (அவன்) மீட்டால் மீள்வாயாக; மீட்சி என்பது இல்லையேல் இறந்து தீர்தி - (பகைவர் கட்டில் இருந்து) மீட்கும் செயல் நிகழவில்லையானால் இறந்து ஒழிக; இது அலால் - இத்தகு செயல்கள் அல்லாமல்; இயம்பல் ஆகாச் சொல்லையே உரைத்தாய் - சொல்லத் தகாத சொற்களைச் சொல்லுகிறாயே; என்றும் பழி கொண்டாய் - (இச்சொற்களால்) என்றும் மாயாப் பழியை ஏற்றுக்கொண்டாய்; என்னச் சொன்னாள் - என்று சீதை கூறினாள்.
மீளுதி, தீர்தி - முன்னிலை ஒருமை வினை முற்றுகள். இயம்பல் - தொழிற்பெயர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- “You are not my father; and even if you are, so be it; praising only the bow
- of the garlanded hero, if he frees you, be freed; if there is
- no freeing, die and be done with it; instead of this, words that should never be spoken
- you have uttered; you have taken on blame for ever,” she said.
What the poem says
Cītai disowns him. He is not her father, she says, and even if he is, his only course is to pray for Irāmaṉ's bow to rescue him. If no rescue comes, he should die. By speaking words that should never be spoken, he has earned disgrace that will last for ever.