கம்பராமாயணம் 7746 · யுத்த 16.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வன்திறல் அரக்கன் - கொடிய வலி படைத்த அரக்கனாகிய இராவணன்; அன்ன வாசகம் மனத்துக் கொள்ளா - (சீதை கூறிய) அத்தன்மையான (கடுமையான) சொற்களை மனத்திலே கொண்டு; நின்றது நிற்க - (உன் மனதில்) இருப்பது இருக்கட்டும்; மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க - மேலும் மேலும் நடப்பவைகள் நடக்கட்டும்; நின்முன் நின்றவன் அல்லன் போலாம் சனகன் - உன் கண்முன் நின்றவன் சனகன் அல்லன் போலும் (என்று எண்ணுகிறாய்); முன் இக்கணத்தினின் கொன்று உயிர் குடிப்பென் என்னா - (எனவே) உன் முன் இக்கணத்திலேயே அவனைக் கொன்று (அவனது) உயிரைக் குடிப்பேன் (என்று சொல்லி); சுரிகை வாள் உருவிக் கொண்டான் - வாளை உருவிக் (கையில் எடுத்துக்) கொண்டான்.
கொள்ளா - செய்யா என்னும் வாய்பாட்டு வினை எச்சம். சுரிகை வாள் - இரு பெயரொட்டுப் பண்புத் தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demon of fierce strength, taking those words to heart, said:
- “Let what stands, stand; let what is to happen, happen, more and more; the one who stood
- before you, it seems, is not Caṉakaṉ? This very instant, before you,
- I will kill him and drink his life,” and he drew his dagger-sword.
What the poem says
Stung by Cītai's words, Irāvaṇaṉ plays the next move in the deception. Since she claims the man before her is not her father, he says, let her think what she likes and let events take their course: he will kill him at once before her eyes. He draws his sword, meaning to frighten her into surrender by threatening the man she still half believes is Caṉakaṉ.