கம்பராமாயணம் 7747 · யுத்த 16.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்னையும் கொல்லாய் - உன்னால் என்னையும் கொல்ல முடியாது; இன்னே இவனையும் கொல்லாய் - இது போலவே இந்த மாயாசனகனையும் கொல்ல முடியாது; இன்னும் உன்னையும் கொல்லாய் - மேலும் நீ உன்னையும் கொன்று கொள்ள முடியாது; மற்று இவ் உலகையும் கொல்லாய் - இவ்வுலகில் உள்ள மக்களையும் உன்னால் கொல்ல முடியாது; யானோ இன் உயிர் நீங்கி என்றும் - யான் (வேண்டுமானால்) என்னுடைய இனிய உயிர் நீங்குமாறு செய்து எப்பொழுதும்; கெடாப் புகழ் எய்துகின்றேன் - அழியாத பெரும் புகழை அடையப் போகின்றேன்; பின்னையும் - அதற்குப் பின்பு; எம்கோன் அம்பின் கிளையொடும் பிழையாய் - எம் தலைவனாகிய இராமனது அம்பினால் (நீ) சுற்றத்தவருடன் பிழைத்திருக்க மாட்டாய்; என்றாள் - என்று சீதை கூறினாள்.
மற்று - அசை உலகு - இடவாகுபெயர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- “You cannot kill me; nor can you kill this man now; nor, further,
- can you kill yourself; nor can you kill this world; as for me,
- I shall leave my sweet life and gain a glory that never fades;
- and after that, you and your kin will not escape my lord's arrows,” she said.
What the poem says
Cītai answers the threat calmly. Irāvaṇaṉ has no real power to kill her, or this man, or even himself, or the world: all lies in fate and in Irāmaṉ's hands. If need be, she will give up her own life and win undying fame. After that, he and his whole clan will certainly fall to Irāmaṉ's arrows.