கம்பராமாயணம் 7748 · யுத்த 16.72

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘இரந்தனன் வேண்டிற்று அல்லால், இவன் பிழை இழைத்தது உண்டோ?
புரந்தரன் செல்வத்து ஐயா, கொல்கை ஓர் பொருளிற்றோதான்?
பரந்த வெம்பகையை வென்றால், நின்வழிப் படரும் நங்கை;
அரந்தையள் ஆகும் அன்றே, தந்தையை நலிவதாயின்?

பொருள் · Meaning in Tamil

புரந்தரன் செல்வத்து ஐய - இந்திரனது செல்வத்தைப் பெற்ற ஐயனே! இரந்தனன் வேண்டிற்று அல்லால் - (இந்தச் சனகன் சீதையிடம்) இரந்து வேண்டிக் கொண்டது அல்லாமல்; இவன் பிழை இழைத்தது உண்டோ - இவன் (உனக்கு ஏதேனும்) குற்றம் செய்தது உண்டோ? கொல்கை ஓர் பொருளிற்றோதான் - ஆதலால் இவனைக் கொல்லுவது ஒரு பொருளுடைய செயலாகுமா? பரந்த வெம் பகையை வென்றால் - (நம் இலங்கையைச் சூழ்ந்து) பரந்துள்ள கொடிய பகைவன் ஆகிய இராமனை வெற்றி கொண்டால்; நங்கை நின் வழிப்படரும் - சீதை உன் வழிக்கு வருவாள்; தந்தையை நலிவதாயின் - (அவளது) தந்தையைத் துன்பப்படுத்தினால்; அரந்தையள் ஆகும் அன்றே - (அவள்) துன்பப்படுவாள் அல்லவா?

புரந்தரன் - இந்திரன், அரந்தை - துன்பம்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “He begged and pleaded, but apart from that, has this man done any wrong?
  2. Lord who holds the wealth of Purantaraṉ, is killing him of any use?
  3. If you conquer the cruel enemy spread around us, the lady will follow your way;
  4. will she not be grief-stricken if you torment her father?”

What the poem says

Makōtaraṉ again restrains Irāvaṇaṉ. The captive has done nothing wrong except plead, he argues, so killing him gains nothing. Once Irāvaṇaṉ, who has seized the wealth of Intiraṉ (Purantaraṉ), defeats the enemy army surrounding Ilaṅkai, Cītai will come round by herself. Hurting her father would only fill her with grief and turn her further against him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘irantaṉaṉ vēṇṭiṟṟu allāl, ivaṉ piḻai iḻaittatu uṇṭō?
purantaraṉ celvattu aiya, kolkai ōr poruḷiṟṟōtāṉ?
paranta vem pakaiyai veṉṟāl, niṉvaḻip paṭarum naṅkai;
arantaiyaḷ ākum aṉṟē, tantaiyai nalivatāyiṉ?