கம்பராமாயணம் 7749 · யுத்த 16.73
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று அவன் விலக்க - என்று கூறி மகோதரன் இராவணனைத் தடுக்க; மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின் கண் - அவன் திரும்பி அங்கு இருந்த காலத்தில்; குன்று என நீண்ட கும்பகருணனை - மலை போல் ஓங்கிய பெருந்தோற்ற முள்ள கும்பகருணனை; இராமன் கொல்ல - இராமன் கொன்று விட்டதனால்; வன்திறல் குரங்கின் தானை - மிகு வலி படைத்த குரங்குப்படை; வான் உற ஆர்த்த ஓதை - வானத்தைச் சென்று சேரும்படி எழுப்பிய வெற்றிப் பேரொலி; தேவர்கள் ஆர்ப்பும் - தேவர்கள் எழுப்பிய மகிழ்ச்சியொலியுடன்; செவியினூடு செல்ல சென்றன - (இராவணன்) காதுகளில் பரவி விழுந்தன.
இங்குக் காம உணர்ச்சியோடு வந்து வீரம் குன்றி மானம் குறைபட நிற்கும் இராவணன் காதில் போரில் வீரமும் மானமும் இழுக்கா மாவீரனின் மரணம் விழுந்தது. எனக் காம விருப்பமும் சோக மரணமும் அடுத்தடுத்து ஒரே நேரத்தில் நிகழுமாறு கதையை மாற்றிக் கொண்டு செல்லும் மகாகவியின் கவித்திறமை வியந்து பாராட்டற்குரியது. அதனாலன்றோ இது கம்பநாடகம் எனப்பட்டது. ஓதை - ஓசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he was held back with these words and, turning back, sat there, at that moment,
- as Irāmaṉ killed Kumpakaruṇaṉ, tall as a mountain,
- the roar that the monkey army of fierce strength raised to the sky
- went into his ears, with the shouting of the gods going along with it.
What the poem says
Just as Irāvaṇaṉ sits back down, word of the battle reaches him: the monkey army's victory roar, together with the cheering of the gods, rises to the sky because Irāmaṉ has killed the mountain-sized Kumpakaruṇaṉ. The poet turns the story sharply: a king lost in lust, his pride and valour sinking, suddenly hears of the death of a great warrior who never lost his own honour. Desire and tragedy meet in the same moment.