கம்பராமாயணம் 7750 · யுத்த 16.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திறல் உகும் அமரர் - (என்னால்) வலி கெட்டழிந்த தேவர்களும்; நாடும் வானர யூகத்தோரும் - (போர் செய்ய) நாடுகின்ற வானரப் படை அணியினரும்; மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும் - (பிற எவ்வில்லும்) (தங்கள் வில்நாண்) ஒலியை மிக்கு ஒலிக்கும் தன்மை இல்லாத இராம லக்குவரின் வில் நாண் ஒலியும், விஞ்ச தகும் திறன் நினைந்தேன் - (ஒன்றை ஒன்று) மிக்கு ஒலிக்கத் தக்க காரணத்தை நினைத்தேன்; எம்பிக்கு அமரிடைத் தனிமைப்பாடு புகுந்துளது உண்டு - (அது) என் தம்பிக்குப் போர்க்களத்தில் தனியாக இருக்கவேண்டிய நிலை நேர்ந்துள்ளதனால் போலும்; என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் - என்று எண்ணி மனத்தில் துன்பம் வந்து சேர்ந்த நேரத்தில்.
திறல் - வன்மை, யூகம் - வியூகம், அணி வகுப்பு. பொருமல் - துன்பம். உகும் மிகும் தகும் - பெயரெச்சங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “The gods whose strength I broke, and the ranks of the monkey host,
- and the bowstring twang of the two whose strength has no equal, all surpassing one another:
- I have thought what fitting cause there is; for my brother, in the battle, loneliness
- must have come upon him” — when such grief came and filled his heart.
What the poem says
Irāvaṇaṉ listens to the noise: the cheering of the gods he once humbled, the shouts of the monkey ranks, and the twang of the bowstrings of Irāmaṉ and Ilakkuvaṉ, each sound louder than the last. He works out what it must mean: his brother Kumpakaruṇaṉ has been left alone on the battlefield, that is, he has fallen. Dread and sorrow rise in his heart. The sentence carries on into the next verse.