கம்பராமாயணம் 7751 · யுத்த 16.75

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புறந்தரு சேனை முந்நீர் இருஞ் சிறைபோக்கி, போதப்
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு எய்தி, பைய,
‘திறம்திறம் ஆக நின்ற கவிப் பெருங்கடலைச் சிந்தி,
இறந்தனன் உம்பி; அம்பின் கொன்றனன் இராமன் ‘என்றார்.

பொருள் · Meaning in Tamil

புறந்தரு சேனை முந்நீர் அருஞ்சிறை போக்கி - (இராவணனைக் காக்கின்ற) சேனைக் கடலாகிய அரிய காவலைக் கடந்து; போதப் பறந்தனர் அனைய தூதர் - (இராவணனிடம்) செல்லப் பறந்து வந்த தூதர்கள்; செவி மருங்கு எய்தி - (இராவணனை) நெருங்கி அவனது காதுக்கு அருகில் சென்று; பைய - மிக மெதுவாக, திறம் திறம் ஆக நின்ற கவிப் பெருங் கடலைச் சிந்தி - கூட்டம் கூட்டமாக (எதிர்த்து) நின்ற வானரப் படையாகிய கடலைச் சிதற அழித்து; நும்பி இறந்தனன் - உன் தம்பியாகிய கும்பகருணன் இறந்து பட்டான்; இராமன் அம்பின் கொன்றனன் என்றார் - இராமன் (அவனை) அம்பினால் கொன்றான் என்று சொன்னார்கள்.

புறந்தருதல் - பாதுகாத்தல் ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே (புறம் - 312) என வருதல் காண்க. போது - விரைவாக, பைய - மெதுவாக, செய்தியின் தன்மை கருதிய அச்சத்தால் இவ்வாறு கூறினர் என்க. சேனை முந்நீர் கவிப் பெருங்கடல் - உருவகங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Getting past the hard barrier of the sea of guarding troops, the messengers,
  2. who had flown to come quickly, reached close to his ear and softly said,
  3. “Scattering the great sea of monkeys that stood in troop upon troop,
  4. your younger brother has died; Irāmaṉ killed him with an arrow.”

What the poem says

Messengers hurry through the ring of guards that surrounds Irāvaṇaṉ like a sea and whisper in his ear, softly because they fear his reaction: Kumpakaruṇaṉ, after scattering the monkey army in heap after heap, has been killed by Irāmaṉ's arrow. The guards are called a “sea of troops” and the monkey host a “great sea of monkeys”, both metaphors.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puṟantaru cēṉai munnīr aruñ ciṟai pōkki, pōtap
paṟantaṉar aṉaiya tūtar cevi maruṅku eyti, paiya,
‘tiṟam tiṟam āka niṉṟa kavip peruṅ kaṭalaic cinti,
iṟantaṉaṉ numpi; ampiṉ koṉṟaṉaṉ irāmaṉ ‘eṉṟār.