கம்பராமாயணம் 7752 · யுத்த 16.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊரொடும் பொருந்தித் தோன்றும் ஒளியவன் என்ன - ஊர்கோளோடு பொருந்தி விளங்குகிற கதிரவன் போல; ஒண் பொன்தாரொடும் புனைந்த மௌலி - ஒளி பொருந்திய பொன்னால் ஆகிய மாலைகளினால் அழகு படுத்தப்பட்ட மகுடங்கள்; தரையொடும் பொருந்தத் தள்ளி - பூமியில் சென்று சேரும்படி தள்ளி விட்டுவிட்டு; பாரொடும் பொருந்தி நின்ற மராமரம் - நிலத்தில் பொருந்தி நின்ற மராமரமானது; பணைகளோடும் - தன் வலிய கிளைகளோடு; வேரொடும் பறிந்து - வேரொடு பறித்தலுண்டு; மண்மேல் வீழ்வதே போல வீழ்ந்தான் - நிலத்தின் மேல் வீழ்வது போல (இராவணன்) விழுந்தான்.
ஒண் பொன் தாரொடு புனைந்த மௌலிக்கு ஊர்கோளோடு கூடிய கதிரவன் உவமையாயிற்று. இராவணன் தன் இருபது கைகளோடு நிலத்தில் விழுந்தது - மராமரம் வேரொடும் கிளைகளோடும் வீழ்ந்தது போலும் என உவமை கூறினார் ஒளியவன் - கதிரவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the shining sun appearing with a halo round it, his crowns
- adorned with garlands of bright gold struck the ground as he was thrown down,
- and like a marā tree that stood firm upon the earth, with its branches
- and its roots torn up, falling to the ground, he fell.
What the poem says
On hearing the news, Irāvaṇaṉ collapses. His gold-garlanded crowns, gleaming like the sun ringed by a halo, hit the ground. With his twenty arms he falls like a huge marā (sal) tree ripped out by the roots, branches and all, crashing to the earth.