கம்பராமாயணம் 7753 · யுத்த 16.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாங்கள் பிறந்த நாள் தொடங்கி - தாங்கள் ஒன்றாகப் பிறந்த நாள் தொடங்கி, பிறிவு எனும் பீழை - பிரிவு என்கின்ற துன்பம்; என்றும் உறுவது ஒன்று இன்றி - எப்பொழுதும் நேருதல் (என்ற) ஒன்று இல்லாமையால்; ஆவி ஒன்றென நினைந்து நின்றான் - (இருவருக்கும் உடல் இரண்டு) உயிர் ஒன்று என நினைத்திருந்தவனான இராவணன்; எறி வரும் செருவில் - படைக் கலங்களை எறிந்து செய்யும் போரில்; தம்பி தன் பொருட்டு இறந்தான் என்ன - கும்பகருணன் தனக்காக இறந்தான் என்பதைத் தூதுவர் சொல்லக் கேட்டு; அறிவு அழிந்து - அறிவு கெட்டு; அவசன் ஆகி - துக்கம் மிக்கவனாகி; அண்டம் முற்ற அரற்றினன் - அண்டத்தளவு சென்று சேருமாறு பெருங்குரல் எடுத்து அரற்றத் தொடங்கினான்.
பிறிவு - பிரிவு, ரகரம் எதுகை நோக்கி றகரமாகத் திரிந்தது. பீழை - துன்பம். ஆவி ஒன்றென நினைந்து நின்றான், உயிர் ஒன்றாகிய செயிர் தீர் கேண்மை. இருதலைப் புள்ளின் ஒருயிரன்ன நிலை என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The pain called parting, from the day they were born, never once
- having come to them, he who had always thought of their two lives as one,
- hearing that in the battle of hurled weapons his younger brother had died for his sake,
- lost his senses, became helpless, and wailed so that it filled the universe.
What the poem says
Irāvaṇaṉ and Kumpakaruṇaṉ had never known separation since birth; Irāvaṇaṉ thought of them as two bodies with a single life. Hearing that his brother has died in battle fighting for him, he loses his reason, is overcome, and cries out so loudly that the whole universe rings with it. The commentary compares their bond to the mythical two-headed bird with one life.