கம்பராமாயணம் 775 · பால 12.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நகர் - அந்த மிதிலை மாநகர்; பால்வளை - வெண் சங்குகளும்; வயிர்கள் ஆர்ப்ப - ஊது கொம்புகளும் முழங்க; பல் இயம் துவைப்ப - பலவகை வாத்தியங்களும் ஒலிக்க; மாலையும் - மலர்மாலைகளையும்; இழையும் - அணிகலன்களையும்; சாந்தும் - சந்தனக் குழம்பையும்; சுண்ணமும் - நறுமணப் பொடியும்; வாச நெய்யும் - மணமுள்ள தைலவகையும்; வேலை வெண்முத்தும் - கடலின் வெண் முத்தையும்; பொன்னும் - பொன்னையும்; காசும் - இரத்தினங்களையும்; நுண்துகிலும் - மெல்லிய ஆடைகளையும்; வீசி - (ஒருவர்க்கொருவர்) வழங்கி; உவா உற்று - பருவகாலம் வந்ததால்; முந்நீர் ஒல் - கடல் ஆரவாரத்தால்; கிளர்ந்து என்ன - கிளர்ந்தது போல; ஒலி கிளர்ந்தது - ஒலி மிகுதி யாயிற்று.
இராமன் வில்லை முறித்தமையால் இனிச் சீதையின் திருமணம் நடைபெறப் போகின்றது என்ற மகிழ்ச்சியால் மிதிலை நகரத்தவர் மாலை முதலியவற்றை வீசிப் பேராரவாரம் செய்தனர் என்பது. பெளர்ணமி நாளில் கடல் பொங்கி ஒலித்தல் வில் முறிபட்ட தினத்தில் நகரின் முழக்கத்துக்கு உவமையாகும். ஓல் - ஓலம் - கடைக்குறை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Flinging garlands and jewels, sandal paste and scented powder and fragrant oils,
- white pearls of the sea, gold, gems and fine cloth,
- while white conches and horns blared and many instruments resounded,
- the noisy city surged like the sea when it swells with its roar at the full moon.
What the poem says
Mithilā erupts in celebration now that Cītai's wedding is certain. People shower one another with garlands, jewels, sandal paste, perfumes, pearls, gold and fine cloth, while conches, horns and every kind of instrument sound.
The uproar is compared to the ocean at full moon, when the tide swells and roars at its highest.