கம்பராமாயணம் 7755 · யுத்த 16.79

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மின் இலைய வேலோனே - ஒளி பொருந்திய இலை வடிவில் அமைந்த வேற்படையை ஏந்தியவனே; யான் உன் விழிகாணேன் - யான் (நீ இறக்கும் போது) உன் அருகிருந்து கண்ணால் சாவைக் காணாதவனானேன்; நின் நிலை யாது என்னேன் - போர்க்களத்தில் உன் நிலை எவ்வாறு உள்ளது என வினவி அறியாதவன் ஆனேன்; உயிர் பேணி நிற்கின்றேன் - மேலும் என் உயிரைப் (பெரிதென மதித்து அதனைப்) பாதுகாத்துக் கொண்டு நிற்கின்றேன்; உன் நிலைமை ஈது ஆயின் - உன்னுடைய நிலை இவ்வாறு இருக்குமானால்; ஓடைக் களிறு உந்தி - நெற்றிப் பட்டமணிந்த (ஐராவதம் என்னும்) யானையைச் செலுத்திக் கொண்டு; புரந்தரனார் பொன்னுலகம் மீளப் புகாரோ - இந்திரன் தன் இந்திரலோகத்துக்கு மீண்டும் புக மாட்டானோ? புகுவன்.

யான் உன் விழி காணேன் - உடன் பிறந்தார் இறக்கும் போது அருகில் இருந்து காண வேண்டும் என்ற பண்பாட்டு மரபு பற்றி வந்தது. நின்நிலை யாது என்னேன் - கும்பகருணனைப் போருக்கு அனுப்பி விட்டுப் போர்க்கள நிலைமையை எண்ணாது மாயா சனகனை வைத்துக் காம வயப்பட்டுத் தான் செய்த செயலை எண்ணி இரங்கிக் கூறியது. ஓடை - நெற்றிப் பட்டம், களிறு - ஐராவதம் என்ற வெள்ளை யானை. பொன்னுலகம் - தேவலோகம், சுவர்க்கம் எனினும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “O bearer of the leaf-shaped spear that flashes like lightning! I did not see your eyes;
  2. I did not ask how you fared; I stand here guarding my own life;
  3. if this is your state, will not Purantaraṉ, driving his elephant with its forehead plate,
  4. enter the golden world once more?”

What the poem says

Irāvaṇaṉ reproaches himself. He was not at his brother's side when he died, as custom says kin should be; he never even asked how the battle went, because he was busy with the false Caṉakaṉ and his desire for Cītai, and he still clings to his own life. With Kumpakaruṇaṉ gone, Intiraṉ will ride his white elephant Airāvata back into heaven and reclaim his throne.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'miṉ ilaiya vēlōṉē! yāṉ uṉ viḻi kāṇēṉ,
niṉ nilai yātu eṉṉēṉ, uyir pēṇi niṟkiṉṟēṉ;
uṉ nilaimai ītu āyiṉ ōṭaikkaḷiṟu untip
poṉṉulakam mīḷap pukārō, purantaraṉār?