கம்பராமாயணம் 7756 · யுத்த 16.80

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘வல்நெஞ்சின் என்னை நீ நீத்துப் போய், வான் அடைந்தால்,
இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார்?
மின் அஞ்சும் வேலோய்! விழி அஞ்சி வாழ்கின்றார்,
தம் நெஞ்சம் தாமே தடவாரோ, தானவர்கள்?

பொருள் · Meaning in Tamil

மின் அஞ்சும் வேலோய் - மின்னலும் அஞ்சும்படி ஒளி வீசுகின்ற வேல் படையை உடையவனே; என்னை நீ வன் நெஞ்சின் நீத்துப் போய் - என்னை நீ வலிய நெஞ்சுடையவனாக விட்டுப் போய்; வான் அடைந்தால் - வீரர் உலகு அடைந்தால்; இன்னம் - இனிமேல்; சிலரோடு ஒரு வயிற்றின் பிறப்பார் யார் - சிலருடன் ஒரு (தாய்) வயிற்றில் பிறக்க (விரும்புபவர்) யார்? விழி அஞ்ச வாழ்கின்றார் - கண் (எதிரில் வர) அஞ்சி வாழ்கின்றவர்களாகிய; தானவர்கள் - தனுவின் வழி வந்த அசுரர்கள்; தம் நெஞ்சம் தாமே தடவாரோ - தம் மார்பைத் தாமே தடவிக் கொண்டு வரமாட்டார்களா?

வன்நெஞ்சில் - என்னைப் பிரியாமல் இருந்த நீ இப்போது கல் நெஞ்சனாய் என்னைப் பிரிந்தாய். வான் - வீர சுவர்க்கம், நெஞ்சம் தடவல் - தன் பகை போய்விட்டது எனச் செருக்கி நெஞ்சைத் தடவுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “If you, hard of heart, leave me and go and reach heaven,
  2. who will ever again be born with others from one womb?
  3. O you with the spear that even lightning fears! Those who lived in dread of your eyes,
  4. the Tāṉavas, will they not stroke their own chests?”

What the poem says

Irāvaṇaṉ accuses his brother of a hard heart for leaving him and going to the heroes' heaven: after this, who would want to be born with brothers from the same womb? The Tāṉavas, demons who used to tremble at Kumpakaruṇaṉ's glance, will now pat their chests in pride, relieved that their enemy is gone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘val neñciṉ eṉṉai nī nīttup pōy, vāṉ aṭaintāl,
iṉṉam cilarōṭu oru vayiṟṟiṉ yār piṟappār?
miṉ añcum vēlōy! viḻi añca vāḻkiṉṟār,
tam neñcam tāmē taṭavārō, tāṉavarkaḷ?