கம்பராமாயணம் 7758 · யுத்த 16.82

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மாண்டனவாம் சூலமும், சக்கரமும், வச்சிரமும்;
தீண்டினவா ஒன்றும் செயல் ஆற்றாவாம்; தெறித்து
மீண்டனவாம்; மானுடவன் மெல் அம்பு மெய் உருவ,
நீண்டனவாம்; தாம் இன்னும் நின்றாராம், தோள் நோக்கி!

பொருள் · Meaning in Tamil

மாண்டனவாம் - மாட்சிமைப்பட்டதாகிய; சூலமும் - (சிவனது) சூலாயுதமும்; சக்கரமும் - (திருமாலுக்கு உரிய) சக்கராயுதமும்; வச்சிரமும் - (இந்திரனது) வச்சிராயுதமும்; தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம் - (முன்பு) உன்மீது தீண்டினவாகி ஒன்றும் செய்யமுடியாது செயல் அற்றுத்; தெறித்து மீண்டனவாம் - தெறித்து (அப்பால்) போய்விட்டன; மானிடவன் மெல் அம்பு - (இப்போதே) மனிதன் எய்த மென்மையான அம்புகள்; மெய் உருவ நீண்டனவாம் - (உன்) உடம்பைத் துளைக்கும்படி நீண்டு (வலியொடு) வந்தனவாம்; தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி - இந்நிலையில் இராவணன் இன்னும்கூடத் தன்தோளைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். (என்னே இது)

மெல்லம்பு - மானிடன் விடும் அம்பின் வலிமைக் குறைவையும் இழிவையும் சுட்டி நின்றது. மாண்டனவாம் - மழுங்கின எனினும் அமையும். தாம் - இராவணன் தன்னைப் படர்க்கையாகக் கூறியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “The glorious trident, the discus and the thunderbolt,
  2. touching you, were rendered powerless, it seems; they glanced off
  3. and turned back, it seems; yet a man's feeble arrows, so as to pierce your body,
  4. came long and strong, it seems; and he still stands there, it seems, gazing at his own shoulders!”

What the poem says

Irāvaṇaṉ marvels bitterly. Śiva's trident, Viṣṇu's discus and Intiraṉ's thunderbolt all once struck Kumpakaruṇaṉ and bounced off harmlessly. Yet a mortal's slight arrows pierced him through. And Irāvaṇaṉ, speaking of himself in the third person, still stands admiring his own mighty arms as though they meant something.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘māṇṭaṉavām cūlamum, cakkaramum, vacciramum;
tīṇṭiṉavā oṉṟum ceyal aṟṟavām; teṟittu
mīṇṭaṉavām; māṉiṭavaṉ mel ampu mey uruva,
nīṇṭaṉavām; tām iṉṉam niṉṟārām, tōḷ nōkki!