கம்பராமாயணம் 7759 · யுத்த 16.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எம்பியர்கள் நோக்கு அறவும் மாளவும் - என் தம்பியர்கள் பார்ப்பதற்குக் கூட இல்லாமல் இறந்து படவும்; இ இலங்கை நொய்து போக்கு அறவும் - இந்த இலங்கை எளிமையாக (பகைவர் கையில்) பட்டு விடவும்; மாதுலனார் பொன்றவும் - மாமனாகிய மாரீசன் இறக்கவும்; என்பின் பிறந்தாள் மூக்கு அறவும் - என்பின் பிறந்தவளாகிய (சூர்ப்பநகை) மூக்கை இழக்கவும்; ஒருத்தி முலைக் கிடந்த ஏக்கறவால் - ஒரு பெண்ணின் முலையிடத்துக் கொண்ட ஆசையால் தாழ்ந்தேன்; வாழ்ந்தேன் - (மானம் இன்றி) இன்னும் உயிருடன் இருக்கிறேன்; உனை இழந்தும் இன்னம் இரேனோ - உன்னை இழந்தும் இன்னும் (உயிருடன்) இருக்க மாட்டேனோ?
ஒரு பெண்ணின் மீது கொண்ட காமம் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் படுத்தும் பாட்டை இப்பாடலில் இராவணன் கூறி அரற்றுகிறான். எம்பியர்கள் - கரன் தூடணன் கும்பகருணன் முதலியோர் மாதுலனார் - மாமனாகிய மாரீசன். ஏக்கறவு - ஆசையால் தாழ்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “While my younger brothers died beyond all sight, while this Ilaṅkai was easily
- lost beyond escape, while my uncle perished, while she who was born after me
- lost her nose, I lived on, through my yearning for one woman's
- breast; shall I still live on, even having lost you?”
What the poem says
Irāvaṇaṉ admits that his lust for one woman has cost him everything: his younger brothers Karaṉ, Tūṭaṇaṉ and now Kumpakaruṇaṉ dead, Ilaṅkai almost lost, his uncle Mārīcaṉ killed, and his sister Cūrppaṇakai mutilated. Through all this he went on living, a slave to desire. Now that he has lost Kumpakaruṇaṉ too, must he still live?