கம்பராமாயணம் 7765 · யுத்த 16.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தன் கண் கடந்த தோளானை - தன் கண்ணுக்கு அடங்காத பேரழகு படைத்த தோளை உடைய இராமனையும்; கருணனை கண்டாள் - கும்பகருணனையும் முன்பு கண்டு; ஒரு துணுக்கம் கொண்டாள் - ஒப்பற்ற அச்சம் கொண்டவள் ஆகிய சீதை; அன்னவனை - அத்தகைய பேருருவும் பெருவலியும் படைத்த அவனை; கொற்றவனார் தண்டாதவாளி - வெற்றி பொருந்திய இராமபிரானது தவறாமல் அழிக்கும் தன்மை வாய்ந்த அம்பு; தடிந்த தனி வார்த்தை - அழித்த ஒப்பற்ற சொற்களை; உண்டாள் - மிக விரும்பிக் கேட்டு; உடல் தடித்தாள் - உடல் பூரிப்பு அடைந்தாள்; வேறு ஒருத்தி ஒக்கின்றாள் - அதனால் வேறு ஒருத்தி போன்றவள் ஆனாள்.
இதுவரை அவலச் சுவை பற்றி வந்த உணர்வு முன்னுள்ள 87 ஆம் பாடல் முதல் உவகைச் சுவையாக மாறியுள்ளமை காண்க. கருணனைக் கண்டாள் - கும்பகருணனின் பேருருவத்தையும் பெருவலியையும் சொல்லக் கேட்டிருந்த சீதை அவன் இராமபிரான் முன் போர்க்களத்தில் நிற்பதைக் கற்பனையால் கண்டாள் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She had seen Karuṇaṉ, and him whose shoulders surpassed what her eyes could hold;
- she had felt a dread; now the single word that the victorious one's
- unfailing arrow had cut him down
- she drank in, and her body swelled; she seemed another woman.
What the poem says
Cītai had pictured Kumpakaruṇaṉ, of whose huge size and strength she had heard, facing Irāmaṉ, whose beauty her eyes could not take in, and she had been gripped by fear. Now she drinks in the news that Irāmaṉ's arrow has killed him, and she seems transformed into another woman. From here the mood of the chapter turns from grief to joy.