கம்பராமாயணம் 7769 · யுத்த 16.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வரிசடை நறுமலர் வண்டு பாடு இலாத் - அழகையும் நிறத்தையும் கொண்ட மணம் மிக்க மலர்களில் மொய்க்கும் வண்டுகள் தங்குதல் இல்லாத; துரிசு அடை புரிகுழல் - அழுக்கடைந்து முறுக்கு ஏறியுள்ள கூந்தலைத்; சும்மை சுற்றிய ஒரு சடை உடையவட்கு - தொகுதியாகச் சுற்றி வைத்துள்ள ஒரு சடையை உடையவளாகிய சீதையிடம்; உடைய அன்பினாள் திரிசடை - மிக்குடைய அன்புடையவள் ஆகிய திரிசடை என்பவள்; தெருட்டுவாள் - தேற்றுபவளாய்; இனைய செப்புவாள் - இத்தகைய சொற்களைச் சொல்லத் தொடங்கினாள்.
ஒரு சடை உடையவள் - சீதை, குமையுறத் திரண்டு ஒரு சடை ஆகிய குழலாள் (காட்சிப் படலம் - 10) என்றதும் காண்க. வரி - அழகு. சடை - நிறம். திரிசடை - வீடணன் மகள், தந்தையைப் போலவே அற வழிப்பட்டவள். சுந்தர காண்டக் காட்சிப் படலத்தில் வரும் (3 - 12) பாடல்கள் காண்க. துரிசு - அழுக்கு, "யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி" என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தொடர் நினைவு கூர்வதற்கு உரியது. (7 ஆம் திருமுறை 527)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Towards her who had a single braid, wound round in a mass, her curled hair
- dulled with grime, where no bees hummed over fragrant flowers of lovely hue,
- she who had love for her,
- Tiricaṭai, consoling her, spoke words such as these.
What the poem says
Cītai's hair, once adorned with fragrant flowers that drew humming bees, is now matted and dirty, twisted into a single braid, the sign of a wife separated from her husband. Tiricaṭai, Vīṭaṇaṉ's daughter, a demoness as righteous as her father and loving towards Cītai, now comes to comfort her.