கம்பராமாயணம் 7781 · யுத்த 17.10

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காய்ப்புண்ட நெடும் படைகை உளதாத் - காய்ச்சிக் கூர்மையாக அடிக்கப் பெற்ற நெடிய படைக்கலங்கள் தன் கையில் உள்ளதாக; தேய்ப்புண்டவனும் - தரையில் தேய்க்கப் பட்டு இறந்த அக்ககுமாரனும்; சில சில் கணையால் ஆய்ப்புண்டவனும் - சில வலியற்ற அம்புகளால் உயிரொடுங்கியவனான கும்பகருணனும்; அவர் சொல் வலதால் ஏய்ப்புண்டவனும் - இராம இலக்குவரது புகழின் வல்லமையால் ஏய்க்கப்பட்டவனான வீடணனும்; என எண்ணினையோ - என்று (என்னை) எண்ணினாயோ.

தேய்ப்புண்டவன் - அனுமனால் தரையில் தேய்க்கப்பட்டு உயிரொடுங்கிய அக்ககுமாரன். இச்செயல் சுந்தர காண்டத்தில் அக்ககுமாரன் வதைப் படலத்தில் (படலம் 10) கண்டது. ஆய்ப்புண்டவன் - உயிரொடுங்கியவனான கும்பகருணன். சொல்வலதால் - புகழின் வல்லமையால் வலத்தால் வலதால் என்பது. ஏய்ப்புண்டவன் - ஏய்க்கப்பட்டவனான வீடணன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Did you think of me as the one who, with long forged weapons in his hand,
  2. was rubbed out on the ground, or the one who by a few feeble arrows
  3. was brought to an end, or the one who, by the power of their fame,
  4. was beguiled — is that what you thought?”

What the poem says

Atikāyaṉ asks whether his father takes him for one of those who failed: Akṣakumāraṉ, who though armed was dashed against the ground by Aṉumaṉ; Kumpakaruṇaṉ, brought down by a few arrows; or Vīṭaṇaṉ, who was won over by the fame of Irāmaṉ and Ilakkuvaṉ and went over to their side. He is none of these.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kāyppuṇṭa neṭum paṭai kai uḷatāt
tēyppuṇṭavaṉum cila cil kaṇaiyāl
āyppuṇṭavaṉum avar col valatāl
ēyppuṇṭavaṉum eṉa eṇṇiṉaiyō?