கம்பராமாயணம் 7790 · யுத்த 17.19

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்றே விடை நல்க - என்று (இராவணன் கூறி) விடை தர; இறைஞ்சி எழா - (அதிகாயன்) வணங்கி எழுந்து; வன்தாள் வயிரச் சிலை கைக்கொடு - வலிய முனையை உடைய உறுதியான வில்லைக் கையில் கொண்டு; வாள் பொன் தாள் கவசம் புகுதா - ஒளி பொருந்திய பொன்னால் செய்யப்பட்ட கவசத்தினுட்புகுந்து, முகிலின் நின்றான் - கருமுகில் போல் நின்றான்; இமையோர்கள் நெளிந்தனரால் - (அத்தோற்றத்தைப் பார்த்து) தேவர்கள் நடுங்கி உடல் தளர்ந்தனர்.

எழா - எழுந்து, பொன் தாள் கவசம் புகுதா - பொன்னால் ஆகிய கவசத்தை அணிந்து, நெளிதல் - நடுங்கி உடல் தளர்தல், முகிலின் நின்றான் - அதிகாயன் கரு நிறத்தோடு வில்லைக் கையில் கொண்டிருத்தலின் இவ்வுவமை என்க. எழா - புகுதா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். வயிரச்சிலை - பண்புத்தொகை. கொடு - இடைக்குறை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he gave leave with these words, Atikāyaṉ bowed and rose,
  2. took in his hand his strong-ended diamond-hard bow, entered
  3. his bright gold armour, and stood like a rain cloud;
  4. and the gods shrank and trembled.

What the poem says

With his father's leave, Atikāyaṉ bows and rises. He takes up his mighty bow, puts on gleaming golden armour and stands like a dark storm cloud: his black body and the bow in his hand suggest a cloud with a rainbow. The gods, seeing him, cower in fear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟē viṭai nalka iṟaiñci eḻā
vaṉ tāḷ vayirac cilai kaik koṭu vāḷ
poṉ tāḻ kavacam pukutā mukiliṉ
niṉṟāṉ; imaiyōrkaḷ neḷintaṉarāl.