கம்பராமாயணம் 7792 · யுத்த 17.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இழை அஞ்சன மால் களிறு - முகபடாம் பூண்ட மைக்கரு நிறமுடை மதம் மிக்க யானைகள்; முழை அஞ்ச முழங்கின எண் இல் அரி - குகையில் வாழ்ந்து (கேட்போர்) அஞ்சுமாறு கர்ச்சனை செய்யும் எண்ணிலா அளவுடைச் சிங்கங்கள், நாண் ஒலி, மும்முறை நீர் குழை அஞ்ச முழங்கின - (ஆகியவற்றோடு) வில்லின் நாணைத் தெரிக்கும் ஓசை கடல் நீரும் குழைந்து அஞ்சுமாறு முழங்கின; மாமுரசு கோள் மழை அஞ்ச முழங்கின - பெரிய முரசங்கள் (நீரைக்) கொள்ளுதல் உடைய மேகங்களும் அஞ்சும்படி முழங்கின.
இழை - அணிகலன் இங்கு முகபடாம். அஞ்சனம் - கண்மை. முழை - குகை. குழை அஞ்ச - குழைந்து அஞ்சும்படி. கோள் - முதனிலை திரிந்த தொழிற்பெயர். மாமுரசு உரிச்சொல் தொடர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The ornamented, collyrium-black, great elephants and the countless lions
- roared so that caves trembled; the sound of bowstrings
- roared so that the waters of the triple ocean shook with fear; the great drums
- roared so that the rain-laden clouds took fright.
What the poem says
The army's departure is a storm of sound. Elephants dark as eye-black, wearing ornamented face-cloths, and lions without number roar until the caves seem to shake. The twang of bowstrings makes the very ocean tremble, and the great war drums thunder louder than the rain clouds.