கம்பராமாயணம் 7793 · யுத்த 17.22

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெடுவானம் நடுங்க ஆர்த்தார் - (அதிகாயன் உடன் சென்ற வீரர்கள்) நெடிய வானமும் நடுங்குமாறு பேரொலி செய்தனர்; நிலமா மகள் பேர்வள் என அடிப் பேர்த்தார் - பெரிய நிலமாகிய பெண் இடம் பெயர்வள் என்னுமாறு காலை மாறி மாறி வைத்தனர்; நெடு வேலைகள் தூளியினால் தூர்த்தார் - பெரிய கடல்களை (காலடித்) தூசியினால் தூர்த்து நிரப்பினர்; அது கண்டு - அச்செயல்களைக் கண்டு; விசும்பு உறைவோர் வேர்த்தார் - ஆகாயத்தில் வாழ்பவரான தேவர்கள், உடல் வியர்த்தார்.

தூளி - தூசி. வேர்த்தல் - அச்சத்தின் செயல் என்க. நிலமா மகள் - உருவகம். மாமகள் - உரிச்சொல் தொடர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They shouted so that the vast sky shook; they moved their feet
  2. so that it seemed the great lady Earth would be shifted from her place;
  3. they filled up the wide seas with dust;
  4. seeing it, those who dwell in the sky broke into a sweat.

What the poem says

Atikāyaṉ's warriors shout until the sky trembles. Their marching feet seem about to shift Mother Earth from her place, and the dust they raise fills the oceans. The gods in heaven, watching, sweat with fear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārttār neṭu vāṉam naṭuṅka; aṭip
pērttār nilamāmakaḷ pērvaḷ eṉa;
tūrttār neṭu vēlaikaḷ tūḷiyiṉāl;
vērttār atu kaṇṭu vicumpu uṟaivōr.