கம்பராமாயணம் 7794 · யுத்த 17.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தடியோடு துடக்கிய தாரைய - தடித்து (மின்னும்) மின்னலோடு பொருந்திய ஒழுங்கை உடைய; வெண் கொடியோடு துடக்கியகொண்மு எலாம் - வெண்ணிறக் கொடியோடு துடக்குண்டு செல்லும் மேகங்கள் எல்லாம்; முன் அடியோடு மதக்களி யானைகளின் - முன்னே விரைவாக அடியிட்டு ஓடுகிற மதக் களிப்பு மிக்க ஆண் யானைகளின், பின்புறம் பிடியோடு நிகர்த்தன - பின்புறம் செல்லும் பெண் யானைகளை ஒத்தன.
மேகங்கள் பெண் யானையை ஒத்தன என்றார் அடியோடல் - விரைந்து அடியிட்டுச் செல்லல். மதக்களி யானைகளின் பின்புறம் அடியோடு பிடியோடு நிகர்த்தன என்று கொண்டு கூட்டி, அடியோடு என்பதற்கு - அடிச்சுவட்டின் வழியே தொடர்ந்து விரைந்து என்று பொருளுரைப்பினும் ஆம். தடி - தடித்து, மின்னல்; தாரை - ஒழுங்கு, கொண்மு - கொண்மூ - மேகம் - குறுக்கல் விகாரம். தற்குறிப்பேற்ற அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Behind the rutting, frenzied elephants that ran on ahead,
- they looked like their cow-elephants following: the clouds
- in rows, entwined with lightning,
- all the clouds caught up in the white banners.
What the poem says
A fanciful image. The white banners of the army reach up into the clouds, and the clouds, tangled in the banners and flashing with lightning, seem to run along behind the bull elephants like cow-elephants following their mates. The poet gives a natural sight an imagined cause, a figure called taṟkuṟippēṟṟam.