கம்பராமாயணம் 7795 · யுத்த 17.24

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாறு ஆடின மால்கரியின் - அங்குசத்தால் பலமுறை குத்தப்பட்ட மத மயக்கம் கொண்ட யானைகளின்; புடை தாழ் மாமதம் மண்டுதலால் - பக்கங்களில் (இரு கன்னங்களில்) இருந்து பெருகி வருகின்ற மதநீர் ஒன்றின் ஒன்று மிக்குப் பெருகி நிறைதலால்; பாய்பரி யானைகளும் ஆறு ஆடின - பாய்ந்து செல்லும் தன்மையுள்ள குதிரைகளும் யானைகளும் (அந்த மதநீர் ஆற்றில்) குளித்தன; சேண் நெறி சென்ற எலாம் சேறு ஆடின - (அதனால்) (அவை) சென்ற நெடு வழி எல்லாம் சேறாகி விட்டன.

தாறு ஆடுதல் - அங்குசத்தால் பலமுறை குத்தப்படுதல், தாறு - அங்குசம். மதம் மாறாடுதல் - மதநீர் ஒன்றின் ஒன்று மிக்குப் பெருகுதல். யானைகளுக்கு மூன்று வகை மதம் கூறப்படும் அவை கன்ன மதம், கபோல மதம், பீஜமதம் என்பன. ஈண்டுக் கன்ன மதம் கூறப்பட்டது. ஆறு ஆடின - ஆற்றின் கண்ணே குளித்தன. மண்டுதல் - நிறைதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From the sides of the great elephants, goaded again and again, flowed
  2. the rut-fluid, streams vying with one another, and as it pooled,
  3. the leaping horses bathed in a river; and the elephants too
  4. wallowed in mud, along all the long road they went.

What the poem says

The elephants, goaded on by their drivers, stream with rut-fluid from their temples, so much that it collects into a river in which the galloping horses bathe, and the whole long road the army takes becomes mud. Of the three kinds of rut-flow traditionally listed for elephants, this is the one from the temples.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāṟu āṭiṉa māl kariyiṉpuṭai tāḻ
māṟāṭiṉa mā matam maṇṭutalāl
āṟu āṭiṉa pāy pari; yāṉaikaḷum
cēṟu āṭiṉa cēṇ neṟi ceṉṟa elām.