கம்பராமாயணம் 7796 · யுத்த 17.25

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேர் சென்றன செம் கதிரோனொடு சேர்
ஊர் சென்றன போல்; ஒளி ஓடைகளின்
கார் சென்றன கார் நிறை சென்றன போல்;
பார் சென்றில சென்றன பாய் பரியே.

பொருள் · Meaning in Tamil

செங்கதிரோனொடு சேர் ஊர் சென்றன போல் - சிவந்த கதிர்களை உடைய கதிரவனொடு சேர்ந்து ஊர்கோள் சென்றன போல; தேர் சென்றன - (அதிகாயனுடைய) தேரைச் சூழ்ந்து பல தேர்கள் சென்றன, கார் நிரை சென்றன போல் - (மின்னலுடன்) கரிய மேகக் கூட்டங்கள் சென்றன போல்; ஒளி ஓடைகளின் கார் சென்றன - ஒளி பொருந்தி முகபடாம் அணிந்த யானைகள் சென்றன; பாய் பரியே பார் சென்றில சென்றன - பாயும் தன்மை உள்ள குதிரைகள் பூமியில் கால் பதித்துச் செல்லாமல் தாவிச் சென்றன.

அதிகாயன் தேரைப் பல தேர்கள் சூழ்ந்து செல்லுவதற்குச் கதிரவனோடு சேர்ந்து செல்லும் ஊர்கோள் உவமை, ஊர்கோள் - இக்காலத்துக் கோட்டை என வழக்கு. சூரியன் கோட்டை போட்டால் ஓரிரு நாளில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் உள்ளது. நெற்றிப்பட்டத்துடன் யானைகள் செல்லுவதற்கு மின்னலுடன் கரிய மேகங்கள் செல்லுவது உவமை. பார்சென்றில - பூமியில் கால் பதித்துச் செல்லாமல் தாவிச் சென்றன. பாய்பரி - வினைத் தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The chariots went like the halo that goes along
  2. with the red-rayed sun; with gleaming forehead plates
  3. the dark elephants went like rows of dark clouds going by;
  4. not touching the earth, the leaping horses went.

What the poem says

The march is described in three images. The chariots ringing Atikāyaṉ's chariot are like the halo around the sun, which, popular belief holds, foretells rain. The dark elephants in shining face-plates move like black clouds lit by lightning. The horses gallop so lightly that they seem not to touch the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēr ceṉṟaṉa ceṅ katirōṉoṭu cēr
ūr ceṉṟaṉapōl; oḷi ōṭaikaḷiṉ
kār ceṉṟaṉa kār nirai ceṉṟaṉapōl;
pār ceṉṟila ceṉṟaṉa pāy pariyē.