கம்பராமாயணம் 7797 · யுத்த 17.26

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மேருத்தனை வெற்பு இனம் மொய்த்து - மேரு மலையின் அளவுள்ள மலைகளின் கூட்டம் நெருங்கி; நெடும் பாரில் செலுமாறு படப் - பெரிய நிலவுலகில் செல்லும் தன்மை போல; படரும் தேர் சுற்றிடவே - செல்லுகின்ற தேர்கள் சுற்றி நிற்க; கொடு சென்று - (தன் படைகளைச் செலுத்திக்) கொண்டு சென்று; முரண் போர் முற்று களத்திடைப் புக்கனனால் - (மாறுபாடு முற்றுறெ) போர்க் களத்திற்கு (அதிகாயன்) போய்ச் சேர்ந்தான்.

மேரு மலையைப் பிற பெரிய மலைகள் சூழ்ந்து நிற்பது அதிகாயன் தேரைப் பிற தேர்கள் சூழ்ந்து நிற்பதற்கு உவமை. வெற்பு - மலை. மொய்த்து - நெருங்க, மேருத்தனை - மேருவை தன் என்பது சாரியை. செலுமாறுபட - செல்லும் தன்மை ஒப்ப. கொடு - இடைக்குறை, ஆல் - அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if a host of mountains crowding round Mēru
  2. were moving over the wide earth, with the moving
  3. chariots ringing him he went on, and into
  4. the field where fierce battle was raging he entered.

What the poem says

Atikāyaṉ's chariot, surrounded by the others, moves like Mount Mēru encircled by lesser mountains travelling across the earth. In this formation he reaches the battlefield where the fighting is fierce.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēruttaṉai veṟpu iṉam moyttu neṭum
pāril celumāṟu paṭap paṭarum
tēr cuṟṟiṭavē koṭu ceṉṟu muraṇ
pōr muṟṟu kaḷattiṭaip pukkaṉaṉāl.