கம்பராமாயணம் 7799 · யுத்த 17.28

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மலை கண்டன போல் வரு தோளொடு - மலையைக் கண்டாற் போன்று (விளங்கி) வருகின்ற தோள்களுடன்; தாள் கலை கண்ட கருங்கடல் கண்டு - தாள்களும் கலைதல் பொருந்திய கருமையான கடலைக் கண்டு; (கும்பகருணன் உடல்) உளவாம் நிலை கண்டன கண்டு - (அவனுக்கு) நேர்ந்துள்ள நிலைமைகளை (மனத்தில்) எண்ணிக் கண்டு; (வருந்திய அதிகாயன்) ஒரு தாதை நெடுந் தலை கண்டிலென் - ஒப்பற்ற தந்தையாகிய (கும்பகருணனது) பெரிய தலையைக் கண்டிலேன் என்று; நின்று சலித்தனனால் - (எண்ணி) நின்று வருந்தினான்.

கலைகண்ட கருங்கடல் - கலைதல் பொருந்திய கருமையான கடல், ஈண்டுக் கும்பகருணன் உடம்பு. தோளும் தாளும் தலையும் அற்ற தாதையின் உடம்பு கண்டு அதிகாயன் வருந்தினான் என்க. சலித்தல் - வருந்துதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing the shoulders that came like mountains seen, and the legs,
  2. and the dark sea broken apart, and seeing the state
  3. they had come to, he could not see the great head
  4. of the one who was a father to him, and he stood and grieved.

What the poem says

Atikāyaṉ finds Kumpakaruṇaṉ's body, his uncle, whom he regards as a father. The arms lie like mountains and the legs apart, and the trunk is like a dark sea broken up. Seeing how the body has been hacked to pieces, and unable to find the great head anywhere, he stands there grieving.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malai kaṇṭaṉapōl varu tōḷoṭu tāḷ
kalai kaṇṭa karuṅ kaṭal kaṇṭu uḷavām
nilai kaṇṭaṉa kaṇṭu oru tātai neṭun
talai kaṇṭilaṉ niṉṟu calittaṉaṉāl.