கம்பராமாயணம் 7800 · யுத்த 17.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இது மிடல் ஒன்று சரத்தொடு - (இது) வலிமை பொருந்திய அம்புகளோடு; மீது உயர் வான்திடல் அன்று - மேலே மேடாக உயர்ந்திருக்கிற திட்டு அன்று; திசைக்களிறு அன்று - திசை யானைகளின் (உடலும்) அன்று; ஒரு திண் கடல் அன்று - ஒப்பற்ற வலிமையான கடலும் அன்று; எந்தை கடக் கரியான் உடல் என்று - என் தந்தையாகிய போரில் கடத்தற்கு அரியவனான கும்பகருணனின் உடல் என்று (உணர்ந்து); உயிரோடும் உருத்தனனால் - (அதிகாயன்) பெரு மூச்சு விட்டுச் சினப்பட்டான்.
இது சரத்தொடு கூடிய உயர்ந்த திடல் அன்று. களிறு அன்று. திண் கடல் அன்று என மறுத்துக் கும்பகருணன் உடல் என்பது பெற வைத்தார். அவன் உடல் திடல், களிறு, கடல் போலும் என்க. மிடல் - வலிமை. கடக்கரியான் என்பதற்கு மதம் கொண்ட யானை போன்றவன் என்றும், யானைப் படையை உடையவன் என்றும் பொருள் உரைப்பார் உளர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- “This, bristling with mighty arrows, is not a mound rising high to the sky;
- it is not an elephant of the quarters; it is not some solid
- sea; what is it? It is the body of my father, unconquerable in war,
- elephant in rut,” and he raged with all his life.
What the poem says
The poet uses a figure of denial to show the size of Kumpakaruṇaṉ's corpse. Stuck with arrows, it is no towering hill, no elephant guarding a quarter of the sky, no solid sea: it is the body of Atikāyaṉ's “father”, whom no one could overcome in battle. Recognising it, Atikāyaṉ sighs deeply and flares into rage.