கம்பராமாயணம் 7801 · யுத்த 17.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எல்லே - அந்தோ; இவை காணிய எய்தினெனோ - இவற்றைக் காண்பதற்காகவா (இங்கு) வந்தேன்; ஒருநான் - ஒருவனாகிய நான்; வல்லே உளராயின மானுடரைக் கொல்லேன் - விரைவாக உயிருடன் உளராகிய மனிதர்களைக் கொல்லாதவனும்; உயிர் கோள் நெறியில் செல்லேன் எனின் - அவர்களது உயிரைக் கொள்ளுவதற்குரிய வழியில் செல்லாதவனும் (ஆனேன்) எனின்; இவ் இடர் தீர்குவெனோ - இந்தத் துன்பத்தை விட்டு நீங்குவேனோ?
எல்லே - அந்தோ, இரக்கக் குறிப்பிடைச் சொல். "எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ” என்று திருப்பாவைப் பாடல் கூறுதல் காண்க. காணிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். கோள் - முதனிலை திரிந்த தொழிற்பெயர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Alas! Did I come here to see these things?
- If I, alone, do not swiftly kill the men who are still alive,
- and do not go the way of taking their lives,
- shall I ever be rid of this grief?”
What the poem says
Atikāyaṉ cries out in sorrow: did he come only to see this? Unless he swiftly kills the two men who are still alive and takes their lives, he will never be free of this pain. The opening “Ellē!” is an exclamation of grief, the same word as in the opening of a well-known verse of Āṇṭāḷ's Tiruppāvai.