கம்பராமாயணம் 7802 · யுத்த 17.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்னா முனியா - என்று கூறிச் சினந்து; இது இழைத்துளவன் பின்னானையும் - இச்செயலைச் செய்தவனாகிய (இராமன்) பின் பிறந்த (இலக்குவனையும்); இப்படிச் செய்து பெயர்ந்து - இத்தன்மையன் (ஆகும்படி) செய்து போய்; அன்னான் இடர் கண்டு - அந்த இராமனுடைய துன்பத்தைக் கண்டு; இடர் ஆறுவென் என்று உன்னா - (என்) துன்பம் தணிவேன் என்று நினைத்து; ஒருவற்கு - ஒரு தூதுவனுக்கு; இது உணர்த்தினனால் - இதனை உணர்த்தல் ஆனான்.
இப்படிச் செய்தல் - கும்பகருணனைச் செய்தது போல் கைவேறு கால்வேறாகச் செய்தல். முனியா, உன்னா - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சங்கள். ஒருவன் - மயிடன் (அடுத்த பாடல் கொண்டு இதை உணரலாம்.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying this in anger, “The younger brother of the one who did this,
- I will do the same to him, and go,
- and seeing that one's grief, I will ease my own grief,” so
- thinking, he made this known to one man.
What the poem says
Atikāyaṉ resolves to cut Ilakkuvaṉ to pieces just as Kumpakaruṇaṉ was cut up, so that Irāmaṉ will feel the same grief and his own sorrow will be eased. With this aim, he gives instructions to a messenger, named in the next verse as Mayiṭaṉ.