கம்பராமாயணம் 7803 · யுத்த 17.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மயிடன்நீவா - மயிடனே நீ வா; ஒருவல் விசையில் நீ போ - ஒப்பற்ற மிக்க வேகத்தோடு (புறப்பட்டு) நீ போய்; அவ் இலக்குவனில் புகல்வாய் - அந்த இலக்குவனிடத்தில் சொல்லுவாய்; நான் ஈது துணிந்தனென் நண்ணினெனால் - நான் (இலக்குவனை) முண்டமாகச் செய்யும் இச்செயலை ஆராய்ந்து துணிந்துள்ளேன்; மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய் - சிறந்த நீதியை உணர்ந்து சொல்லுவாய்.
நண்ணுதல் - ஆராய்தல், ஈது - இலக்குவனை தோளும் தாளும் அற்றவனாகச் செய்தல். நான்காவது அடியில் “நீதியை உன்னி' என்ற பாடம் ஓசை நலன் கருதிக் கொள்ளப்பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Come, Mayiṭaṉ! With great speed
- go to that Ilakkuvaṉ and tell him:
- ‘I have resolved on this, having weighed it’;
- think of the highest justice and speak.”
What the poem says
Atikāyaṉ summons his messenger Mayiṭaṉ and orders him to hurry to Ilakkuvaṉ. He is to announce that Atikāyaṉ has firmly resolved to cut him down, and to deliver the message in keeping with the proper code of envoys.