கம்பராமாயணம் 7811 · யுத்த 17.40

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செங்கதிரோன் உருவின் உறை தந்தன பொறை தந்தன - சிவந்த கதிர்களை உடைய கதிரவன் நிறத்தோடு பொருந்தியனவும் பாரமுள்ளனவும்; இமையோர் திறை தந்தன - தேவர்கள் திறைப் பொருளாகத் தந்தனவும்; தெய்வ நிதிக் கிழவன் - தெய்வ நிதிகளுக்கு எல்லாம் தலைவனான குபேரன்; முறை தந்தன - முறைமை பற்றித் தந்தனவுமான; காசு ஒளிர்பூண் - மணிகள் ஒளிவிடுகிற அணிகலன்களை; தந்து முடிக்குவெனால் - தருவேன் (தந்து முடிப்பேன்).

செல்வம் பல தருவேன். உறை தந்தன - பொருந்தியன. பொறை தந்தன - பாரம் உள்ளன, முறை தந்தன - முறைமை பற்றித் தந்தன. முறை - உடன்பிறந்த முறை என்க. தந்து முடிக்குவென் - முடி துணைவினை, (தன் பொருள் இழந்து முதல் வினையின் பொருளில் வருவது) தெய்வநிதிக் கிழவன் - குபேரன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Ornaments glowing with gems, that match the red-rayed sun in colour,
  2. heavy with weight, that the gods gave as tribute,
  3. that the lord of the divine treasures
  4. gave as is his due — I will give them all to you.”

What the poem says

Atikāyaṉ promises the envoy heavy jewelled ornaments that gleam like the sun, tribute paid by the gods and treasures handed over by Kubera, lord of wealth, as was owed by kinship, since Kubera is Irāvaṇaṉ's half-brother.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘uṟaitantaṉa ceṅ katirōṉ uruviṉ
poṟai tantaṉa kācu oḷir pūṇ imaiyōr
tiṟai tantaṉa teyva nitik kiḻavaṉ
muṟai tantaṉa tantu muṭikkuveṉāl.