கம்பராமாயணம் 7812 · யுத்த 17.41

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாரிய மதமாறா - வடிகிற மதப்பெருக்கு மாறாதனவும்; வண்டினொடும் பாறு ஆடுமுகத்தன - வண்டுகளோடு பருந்துகளும் பறந்து ஆடும் முன்புறத்தை உடையனவும்; பல் பகலும் தேறாதன - பலநாளும் (மதவெறியில் இருந்து) நீங்காதனவும்; செங்கண் வெங்களிமா - ஆகிய சிவந்த கண்களை உடைய கொடிய மதம் மிக்க யானைகள்; நூறாயிரம் ஆயினும் நுந்துவெனால் - நூறாயிரம் வேண்டுமானாலும் தருவேன்.

மண மதத்திற்காக வண்டுகளும், எதிர்ப்பட்டோரைக் கொல்லுதலால் கிடைக்கும் உணவுக்குப் பருந்துகளும் மத யானைக்கு முன் பறந்து வரும் என்க, செங்கண் - பண்புத்தொகை. களிமா - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. நுந்துவென் - தன்மை ஒருமை வினை முற்று. ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “With rut-flow streaming unceasing, with bees
  2. and kites dancing before their faces, never calming
  3. for days on end, red-eyed, fierce, rutting elephants,
  4. even a hundred thousand of them, I will give.”

What the poem says

Next he offers a hundred thousand rutting elephants: red-eyed, fierce, never calming, with rut-fluid always streaming. Bees swarm before their faces for the scent of the rut, and kites hover for the flesh of those the elephants kill.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘māṟā mata vāriya vaṇṭiṉoṭum
pāṟu āṭu mukattaṉa pal pakalum
tēṟātaṉa ceṅ kaṇa veṅ kaḷi mā
nūṟāyiram āyiṉum nuntuveṉāl.