கம்பராமாயணம் 7813 · யுத்த 17.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செம்பொன்னின் அமைந்து சமைந்தன தேர் - செம்பொன்னால் செய்யப்பட்டு உறுதி பொருந்திய தேர்களும்; உம்பர் நெடுவானினும் ஒப்பு உறழாப் - மேல் உள்ள வானுலகத்திலும் ஒப்பும் மாறுபாடும் இல்லாத; பம்பும் மணிதார் அணி - நிறைந்த மணிகளால் ஆன மாலைகளை அணிந்து; இம்பர் நடவாதன - இவ்வுலகத்தில் நடக்காதனவாகி; பாய்பரிமா - பாய்ந்து செல்லும் குதிரைகளை; ஈகுவெனால் - தருவேன்.
பம்புதல் - நிறைதல், இம்பர் - இவ்வுலகில் சமைந்தன - முற்றெச்சம். பரிமா - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. ஆல் - அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Chariots made and finished in red gold,
- with nothing to equal or rival them even in the high heavens above;
- leaping horses decked with garlands thick with gems,
- that do not tread this earth, I will give.”
What the poem says
He also promises chariots of red gold that have no equal even in heaven, and swift horses adorned with jewelled garlands, so fast that they seem not to touch the earth.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘cem poṉṉiṉ amaintu camaintaṉa tēr
umpar neṭu vāṉiṉum oppu uṟaḻā;
pampum maṇi tār aṇi pāy parimā
impar naṭavātaṉa īkuveṉāl.