கம்பராமாயணம் 7815 · யுத்த 17.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மற்றும் ஒரு தீது இல் மணிப் பணி தந்து
உற்ற உன் நினைவு யாவையும் உந்துவெனால்
பொன்திண் கழலாய்! நனி போ ‘எனலோடு
எற்றும் திரள் தோளவன் ஏகினனால்.
பொருள் · Meaning in Tamil
மற்றும் - மேலும்; ஒரு தீது இல் மணிப் பணி தந்து - ஒரு குற்றமும் இல்லாத மணிகள் பதிக்கப்பட்ட அணிகலன்களைக் கொடுத்து; உன் நினைவு யாவையும் உற்று உந்துவெனால் - நீ வேண்டி நினைக்கும் (பொருள்கள்) எல்லாவற்றையும் பொருந்தக் கொடுப்பேன்; பொன் திண் கழலாய் - பொன்னில் ஆகிய வலிய வீரக்கழல் அணிந்தவனே (மயிடனே); நனிபோ எனலோடு - விரைந்து போ என்று அதிகாயன் கூறியவுடன்; எற்றும் திரள் தோளவன் ஏகினனால் - (பகைவரைத்) தாக்கும் திரண்ட தோள்களையுடையவனான மயிடன் செல்லலானான்.
பணி - அணிகலன், எற்றுதல் - தாக்குதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “And besides, giving you flawless jewelled ornaments,
- I will grant you everything you could think of;
- you with strong golden anklets, go quickly,” and at these words,
- he of the massive, smiting shoulders went off.
What the poem says
Finally Atikāyaṉ promises flawless jewels and anything else the envoy might wish for, and tells him to hurry. Mayiṭaṉ, a warrior with strong shoulders, sets off at once.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maṟṟum oru tītu il maṇip paṇi tantu
uṟṟu uṉ niṉaivu yāvaiyum untuveṉāl
poṉ tiṇ kaḻalāy! naṉi pō ‘eṉalōṭu
eṟṟum tiraḷ tōḷavaṉ ēkiṉaṉāl.