கம்பராமாயணம் 7821 · யுத்த 17.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சையப் படிவத்து ஒரு தந்தையை - மலை போன்ற வடிவுடைய தந்தையின் (கும்பகருணனது); மெய் எப்படி நும்முன் செய்தனன் - உடம்பை எப்படி உன் தமையன் முன்பு செய்தானோ; விரைந்து அப்படி இப்படியில் செய்யப்படு கிற்றி - அப்படி விரைந்து இந் நிலத்தில் (நீ) செய்யப்படுவாய்; ஐயப்படல் தெரித்தனனால் - (அது பற்றி) சந்தேகப்படாதே (அதை நான்) தெரிவித்து விட்டேன்.
சையப்படிவம் - மலை போன்ற வடிவம். மெய் எப்படிச் செய்தனன் - கால்களையும் கைகளையும் தலையையும் வெட்டி முண்டமாகச் செய்த நிலை. இப்படியில் - இப்பூமியில். ஆல் - அசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Just as he swiftly did, before your elder brother, to the body
- of our mountain-formed father,
- just so, have no doubt, on this earth
- you will be done to,” he declared.
What the poem says
Mayiṭaṉ spells out the threat. As Irāmaṉ hacked apart the mountain-like body of Kumpakaruṇaṉ, whom Atikāyaṉ regards as a father, cutting off arms, legs and head, so Ilakkuvaṉ will be cut down here on this earth. Let him not doubt it.