கம்பராமாயணம் 7832 · யுத்த 17.61

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘காலங்கள் கணக்கு இல கண் இமையா
ஆலம் கொள் மிடற்றவன் ஆர் அழல்வாய்
வேல் அங்கு எறிய கொடு ‘விட்டது நீள்
சூலம்கொல்? ‘எனப் பகர் சொல் உடையான்;

பொருள் · Meaning in Tamil

கணக்கு இற காலங்கள்கண் இமையா - கணக்கற்ற காலங்கள் கண் இமைத்தல் இல்லாத; ஆலம்கொள் மிடற்றவன் - ஆலகால நஞ்சைக் கழுத்தில் கொண்ட (நீலகண்டனாகிய) சிவபிரான்; ஆர் அழல் வாய் வேல் அங்கு எறிய - நிறைந்த நெருப்பு பொருந்திய வேலினை (போரில் இவ்வதிகாயன் மீது) எறிந்த பொழுது; கொடு விட்டது நீள் சூலம் கொல் என - (அதனைக் கையில் பற்றிக்) கொண்டு (நீ) விட்டது (இந்த) நீண்ட சூலம் போலும் என்று; பகர் சொல் உடையான் - செல்லுகின்ற சொல்லை உடையவன்

ஆலம் கொள்மிடற்றவன் - சிவபிரான். பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சினை உண்டு அமரர்களைக் காத்தவன், "விண்ணோர் அமுதுண்டும் சாவ நீ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டும் இருந்தருள் செய்குவாய்” என்பர் இளங்கோவடிகள். கொடு - கையில் பற்றிக்கொண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “When the one with poison in his throat, whose eyes have not blinked
  2. through ages beyond count, hurled at him there his spear with mouth of blazing fire,
  3. he caught it and said, ‘Is this long trident what you let fly?’ —
  4. such are the words he can speak.”

What the poem says

Vīṭaṇaṉ recalls that when Śiva, the unblinking god whose throat holds the poison he swallowed at the churning of the ocean, hurled his fiery spear at Atikāyaṉ, Atikāyaṉ caught it in his hand and mockingly asked whether this long trident was all he had.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kālaṅkaḷ kaṇakku iṟa kaṇ imaiyā
ālam koḷ miṭaṟṟavaṉ ār aḻalvāy
vēl aṅku eṟiya koṭu ‘viṭṭatu nīḷ
cūlamkol? ‘eṉap pakar col uṭaiyāṉ;