கம்பராமாயணம் 7834 · யுத்த 17.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செயிர் ஒப்புறும் இந்திரர் - சினம் மிகக் கொண்ட இந்திரன்; உயிர் ஒப்புறும் உள்ள எலாம் பல் படை - தன் உயிருக்கு ஒப்பாகக் கூறத்தக்க தன்னிடம் உள்ள பலவகையான படைக்கலங்களை; சிந்திய நாள் - (இவ்வதிகாயன் மீது) செலுத்திய காலத்தில்; அயிர் ஒப்பன நுண்துகள் செய்து - (இவன் அப்படைக்கலங்களை) மணலுக்கு ஒப்பான நுண்ணிய பொடியாகச் செய்து; அவர் தம் வயிரப்படை தள்ளிய வாளியினான் - அந்த இந்திரனின் வச்சிராயுதத்தை வலியிலதாக்கிய அம்புகளை உடையவன்.
இந்திரர் - ஒருமை பன்மையாகக் கூறப்பட்டது. இந்திரர் பலர் எனலும் உண்டு. யாகம் செய்து அடையும் பதவி ஆதலின் இந்திர பதவிக்கு வருவோர் மாறிக்கொண்டு வரும் தன்மை பற்றிப் பன்மையால் கூறினார் எனலும் ஆம். இந்திரர் - தேவர் எனக் கொண்டு பொருள் உரைப்பாருமுளர். அவ்வாறு உரைக்கின் பல்படை சிந்தியவர் தேவர்கள் என்றும், வயிரப் படை செலுத்தியவன் அவர்களின் தலைவனாகிய இந்திரன் என்றும் கொண்டு பொருளுரைக்க. தேவர் படையை நுண்துகள் செய்து, வயிரப் படை தள்ளிய வாளியினான் என அமையும். அயிர் - மணல், வயிரப்படை - வச்சிராயுதம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “When the wrathful Intiraṉ loosed upon him all the many weapons
- he had, dear to him as his life,
- he ground them into fine dust like sand, and their
- thunderbolt he thrust aside with his arrows.”
What the poem says
When the angry Intiraṉ, or the gods led by him, rained down every weapon they held dear as life, Atikāyaṉ's arrows ground them to dust as fine as sand and knocked aside Intiraṉ's thunderbolt itself. The plural “Intiras” may mean the gods in general, or the many who hold Intiraṉ's office in turn, since it is won by sacrifice.