கம்பராமாயணம் 7836 · யுத்த 17.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நல்லது அறன் அல்லது மாறு அறியான் - (இவ்வதிகாயன்) நன்மை பயக்கும் அறன் இல்லாதது தவிர வேறு ஒன்று அறிய மாட்டான்; பல் பணி மறன் அல்லது மாறு அணியான் - பல அணிகலன்களாக வீரத்தைத் தவிர வேறு ஒன்றை அணிய மாட்டான்; திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான் - வலிமை இல்லாததாகிய (எந்த ஒரு) ஒப்பற்ற அருமையான உயிரையும் அழிக்க மாட்டான்; பேரிசை உறல் நல்லது என்று உணர்வான் - பெரும் புகழே அடைதற்கு உரிய நல்லது என்று உணர்வான்.
அதிகாயனது இப்பண்புகளைக் குறிப்பிட்டுள்ள படியால் அவன் வீரப்போர் செய்யும் பெருவீரன் என்பதையும் மாயப் போரைச் சிறிதும் விரும்பாதவன் என்பதையும் நாமறியலாம். இதனை அடுத்த பாடல் காட்டும். அறன் அல்லது - அறநெறி அன்றி, மாறு - வேறு, பணி - அணிகலன். திறன் அல்லது ஓர் உயிர் - வலிமையற்றதாகிய ஓருயிர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “He knows no good apart from dharma;
- he wears no ornament but valour;
- he destroys no precious life except of those who have strength;
- he holds that great fame is the good worth gaining.”
What the poem says
Vīṭaṇaṉ now praises Atikāyaṉ's character. He knows no good other than dharma, wears valour as his only ornament, never kills the weak, and values only glory. He is a true and honourable warrior who scorns trickery, as the next verse confirms.