கம்பராமாயணம் 7837 · யுத்த 17.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காயத்து உயிரே விடு காலையினும் - (இந்த அதிகாயன் போர்க்களத்தில்) உடலின் உள்ள உயிரையே விட வேண்டிய காலம் வந்தாலும்; மாயத்தவர் கூடி மலைந்திடினும் - (தன்னோடு) வஞ்சனைத் தொழில் செய்வார் பலர் கூடிப் போரிட்டாலும்; தேயத்தவர் செய்குதல் செய்திடினும் - உலகில் உள்ளவர்கள் எல்லாம் (தனக்கு) எதிராக ஏமாற்றுப் (போரைச்) செய்தாலும்; மாயத் தொழில் செய்ய மதித்திலனால் - மாயத் தொழிலைச் செய்ய (எப்போதும்) மதித்துக் கருத மாட்டான்.
அதிகாயன் மாயத் தொழிலே செய்யாதவன் என்றவாறு. வான்மீகி அதிகாயனை மாயம் உணர்ந்தவன் என்று கூறுவார் காயம் - உடம்பு. 64- 65 பாடல்களில் அதிகாயனது பண்பு நலன் கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Even when the moment comes to give up the life in his body,
- even if those who use sorcery gather and fight him,
- even if the people of the whole land do their worst,
- he would never think of resorting to sorcery.”
What the poem says
Unlike many demons, Atikāyaṉ never uses magic or deceit in battle, even facing death, even against tricksters or the whole world working against him. Here Kampaṉ departs from Vālmīki, who describes Atikāya as skilled in magic.