கம்பராமாயணம் 7839 · யுத்த 17.68

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
”
”
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘நீர் ஆழி இழிந்து நெடுந்தகையை
“தாராய் அமர் ” என்றனர் தாம் ஒரு நாள்;
ஆர் ஆழிய அண்ணலும் அஃது இசையா
“வாரா அமர் செய்கு ” என வந்தனனால்.

பொருள் · Meaning in Tamil

தாம் ஒருநாள் - (அவர்கள்) தாம் ஒருநாள்; நீர் ஆழி இழிந்து - பாற்கடலில் இறங்கி; நெடுந்தகையை - பெருந்தன்மையுள்ள திருமாலைப் பார்த்து; அமர் தாராய் என்றனர் - போர் தருவாய் என்றனர்; ஆர் ஆழிய அண்ணலும் - வெலற்கரிய சக்கரப் படையை ஏந்திய தலைவனான (திருமாலும்), அஃது இசையா - அதனை ஏற்றுக்கொண்டு; வாராஅமர் செய்க என்று வந்தனனால் - இது வரையில் நிகழ்ந்திராத (கொடிய) போரைச் செய்க என்று சொல்லி வந்தான்.

ஆழி - கடல். இழிந்து - இறங்கி, அமர் - போர் வாரா - இது வரையில் நிகழ்ந்திராத.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "One day they went down into the sea of milk
  2. and said to the great-souled one, 'Give us battle!'
  3. And the lord who bears the unconquerable discus agreed to it
  4. and came forth, saying, 'Wage a war such as has never been.'

What the poem says

Vīṭaṇaṉ is telling Irāmaṉ the old story behind the demon Atikāyaṉ, who has just entered the battle. Two mighty demons, Matu and Kaiṭapaṉ, went down into the ocean of milk where Tirumāl (Viṣṇu) lay and challenged him to fight.

The god, holder of the discus, accepted at once and came out to meet them, calling for a battle unlike any that had been fought before.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nīr āḻi iḻintu neṭuntakaiyai
“tārāy amar ” eṉṟaṉar tām oru nāḷ;
ār āḻiya aṇṇalum aḵtu icaiyā
“vārā amar ceyka ” eṉa vantaṉaṉāl.