கம்பராமாயணம் 7847 · யுத்த 17.76

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இவ் உகம் தனில் - இந்த யுகத்தில்; மெய் வலியான் மது ஆனவன் எம்முன் - உடல் வலி மிக்க மது என்பவன் ஆகிய என் அண்ணன் (கும்பகருணன்); விதியால் மடிந்தனனால் - ஊழ் வினையின் வலிமையால் இறந்து பட்டான்; கதிர்தான் நிகர் கைடவன் - கதிரவனை ஒத்துச் (சுட்டு எரிக்கும்) ஆற்றல் உள்ள கைடவன்; இக்கதிர் வேல் அதிகாயன் - இந்த ஒளி பொருந்திய வேல் ஏந்திய அதிகாயனாவன்; இது ஆக அறைந்தனனால் - இச்செய்தியை மனத்தில் படுமாறு கூறினேன். மது, கைடபர் ஒரு கற்பத்தில் திருமாலின் காதில் இருந்து தோன்றியவர்கள் என்பர். திருமாலின் மூச்சில் பிறந்தவர்கள் என்று கூறுவதும் உண்டு. இவர்கள் திருமாலுடன் போரிட்டு அவர் தொடையில் அகப்பட்டுக் கதையால் கொல்லப்பட்டனர் அவர்களுள் மது கும்பகர்ணன் ஆகவும், கைடபன் அதிகாயன் ஆகவும் இந்த யுகத்தில் பிறந்தனர் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "By fate, in this age, Matu, mighty of body,
  2. born as my elder brother, has died;
  3. Kaiṭapaṉ, a match for the sun, is this Atikāyaṉ
  4. with the shining spear. This I have come to know."

What the poem says

Vīṭaṇaṉ now ties the old legend to the present war. Matu has been reborn in this age as his own elder brother Kumpakaruṇaṉ, who has just been killed by fate's decree; Kaiṭapaṉ, blazing like the sun, is reborn as Atikāyaṉ, the son of Irāvaṇaṉ now standing before them with his bright spear.

The commentary adds that Matu and Kaiṭapaṉ were said to have sprung from Tirumāl's ear, or by another account from his breath.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vitiyāl iv ukamtaṉil mey valiyāṉ
matu āṉavaṉ emmuṉ maṭintaṉaṉāl;
katirtāṉ nikar kaiṭavaṉ ik katir vēl
atikāyaṉ; itu āka aṟintaṉaṉāl.