கம்பராமாயணம் 7851 · யுத்த 17.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘தெய்வப் படையும் சினமும் திறனும்
மையல் தொழில் மாதவம் மற்றும் எலாம்
எய்தற்கு உளவோ இவன் இச் சிலையில்
கைவைப்பு அளவே? இறல் காணுதியால்.
பொருள் · Meaning in Tamil
தெய்வப் படையும் - தெய்வத் தன்மை உள்ள படைக்கலங்களும்; சினமும் திறலும் - சினமும் வலிமையும்; மய் அற்று ஒழி மாதவம் - குற்றம் முழுதும் நீங்கிய பெருந்தவமும்; மற்றும் எலாம் - மற்றும் உள்ள பிற எல்லாமும்; எய்தற்கு உளவோ - வந்து அடைதற்கு உரியனவோ? இவன் - இந்த இலக்குவன்; இச்சிலையில் - இந்த வில்லில்; கய் வைப்பு அளவே - கையை வைத்த அளவிலே; இறல் காணுதியால் - (அவை) அழிந்து ஒழிதலைக் காண்பாய்.
திறல் - வலிமை, மய் - குற்றம், சிலை - வில், இறல் - அழிதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Divine weapons, wrath and might,
- great penance free of every flaw, and all the rest,
- can they come near, the moment this one lays
- his hand upon this bow? You will see them destroyed."
What the poem says
Irāmaṉ insists that nothing the enemy can bring will avail: neither god-given weapons, nor fury and strength, nor the power of spotless austerities. The instant Ilakkuvaṉ sets his hand on his bow, Vīṭaṇaṉ will see all of it come to ruin.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘teyvap paṭaiyum ciṉamum tiṟalum
mai aṟṟu oḻi mātavam maṟṟum elām
eytaṟku uḷavō ivaṉ ic cilaiyil
kai vaippu aḷavē? iṟal kāṇutiyāl.