கம்பராமாயணம் 7852 · யுத்த 17.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெடுந்தகையாய் - பெருமைப் பண்புள்ளவனே! என் தேவியை வஞ்சனை செய்து எழுவான் அன்றே முடிவான் - என் தேவியை வஞ்சனை செய்து எடுத்துச் சென்ற இராவணன் அன்றே இறந்திருப்பான்; இவன் - இந்த இலக்குவன்; அன்னவள் சொல் குன்றேன் என ஏகிய கொள்கையினால் - அந்தச் சீதையினுடைய சொல்லை மீற மாட்டேன் என்று (பாதுகாத்த இடத்தை விட்டு) வெளியேறியதனால்; உளன் ஆகி நின்றான் - (அந்த இராவணன் இதுவரையில்) உயிர் உள்ளவன் ஆகி வாழ்ந்து நின்றான்; (இல்லை எனின் இறந்திருப்பான் என்றவாறு.)
சீதை இறப்பேன் என்று கூறிய (கம்ப. 3331) சொற்களைக் கேட்டுப் பாதுகாவலை விட்டு இலக்குவன் போனதால் இராவணன் உயிர் பிழைத்தான். இல்லையாயின் இறந்து பட்டிருப்பான் என்றவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "He who deceived my queen and carried her off
- would have died that very day; only because this one went away,
- resolved, 'I will not go against her word,'
- has he stayed alive till now, O noble one."
What the poem says
Irāmaṉ recalls the day Cītai was abducted. Had Ilakkuvaṉ remained on guard, Irāvaṇaṉ would have been killed then and there. Only because Ilakkuvaṉ obeyed Cītai's words, when she threatened to die unless he went to look for Irāmaṉ, did he leave her, and that is the only reason Irāvaṇaṉ is still alive.