கம்பராமாயணம் 7855 · யுத்த 17.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிவன் அல்லன் எனில் - (இந்த அதிகாயனைக் கொல்வதற்கு உரியவன்) சிவபிரான் அல்லன் என்றால்; திருவின் பெருமான் அவன் அல்லன் எனின் - திருமகள் தலைவனாகிய திருமால் அல்லன் என்றால்; புவி தந்தருளும் தவன் அல்லன் எனில் - நிலவுலகைப் படைத்தவன் ஆகிய தவச் சிறப்புடைய பிரமதேவன் அல்லன் என்றால்; தனியே வலியோன் இவன் அல்லன் எனில் - தனிச்சிறப்புடைய வலிமை படைத்த இந்த இலக்குவன் அல்லன் என்றால்; பிறர் யார் உளர் - மற்றவர் எவர்தாம் உளர்.
சிவனும், மாலும், பிரமனும் தனி வலி இலக்குவனும் தவிர இவ்வதிகாயனைக் கொலற்கு உரியவர் யார் உளர் என்றவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Civaṉ; and if not he, the Lord of Tiru;
- and if not he, the ascetic who gave us the earth;
- and if not he, this one, mighty all alone;
- and if not he, who else is there?"
What the poem says
Who can kill Atikāyaṉ? Irāmaṉ answers in a chain: Civaṉ; failing him, Tirumāl, lord of the goddess Tiru; failing him, Piramaṉ, the creator who made the world; failing him, Ilakkuvaṉ, unique in strength. Beyond these there is no one. Ilakkuvaṉ is thus ranked beside the three great gods.