கம்பராமாயணம் 7857 · யுத்த 17.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொடியோரை எலாம் - கொடிய அரக்கர்களை எல்லாம்; கொல்வானும் இவன் - கொல்லப் போகின்றவன் இந்த இலக்குவன்; வெல்வானும் இவன் - (அவ்வாறு கொன்று) வெற்றி பெறப் போகின்றவன் இந்த இலக்குவன்; அடல் விண்டு என ஒல்வானும் இவன் - வலிமை பொருந்திக் கொல்லும் தன்மை உள்ள திருமால் போல எதிர்த்துப் போர் செய்பவனும் இந்த இலக்குவன்; உடனே ஒரு நீ செல்வாய் என - எனவே விரைவாக ஒப்பற்ற நீ இவனுடனே செல்வாய் என்று; ஏவுதல் செய்தனனால் - இராமன் வீடணனை ஏவினான்.
அடல் - அழித்தல், கொடியோர் - வினையாலணையும் பெயர். ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "He is the one who will kill all the cruel ones;
- he is the one who will conquer them; he is the one able to fight
- like Viṇṭu, mighty in destruction. Go with him at once,
- you, peerless one." So he commanded.
What the poem says
Irāmaṉ concludes his speech. Ilakkuvaṉ will slay and defeat all the wicked demons, fighting like Viṇṭu (Viṣṇu) in his destroying might. He orders Vīṭaṇaṉ to go with his brother without delay.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kolvāṉum ivaṉ; koṭiyōrai elām
velvāṉum ivaṉ; aṭal viṇṭu eṉa
olvāṉum ivaṉ; uṭaṉē oru nī
celvāy ‘eṉa ēvutal ceytaṉaṉāl.