கம்பராமாயணம் 7858 · யுத்த 17.87

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அக் காலை இலக்குவன் ஆரியனை
முக்காலும் வலங்கொடு மூதுணர்வின்
மிக்கான் மதி வீடணன் மெய் தொடரப்
புக்கான் அவன் வந்து புகுந்த களம்.

பொருள் · Meaning in Tamil

அக்காலை - அப்பொழுது; இலக்குவன் ஆரியனை முக்காலும் வலம் கொடு - இலக்குவன் இராமபிரானை மும்முறை வலம் வந்து; மூதுணர்வின் மிக்கான் அடல் வீடணன் - அற உணர்வு மிக்கவன் ஆகிய வலிய வீடணன்; மெய் தொடர - தன்னைத் தொடர்ந்து வர; புக்கான் அவன் வந்து புகுந்த களம் - அந்த அதிகாயன் வந்து புகுந்த போர்க் களத்துக்குட் புகுந்தான்.

மும்முறை வலம் வருதல் - மனோ வாக்குக் காயங்களில் தண்டம் சமர்ப்பித்தல். முதல் இரண்டு அடிகளுக்குப் “பெருமாளுக்குத் தாம் சேஷமாயிருப்பதையும், பெருமான் நியமனமே தமக்கு உத்தாரக மென்பதையும், தம்முடைய பாரதந்திரிய சொரூபத்தையும் பிரகாசப்படுத்தப் பெரிய பெருமாளாகிய தமது ஆசிரியரை வாசிக காயிக மாநஸிகமாகிய மூன்று கரணங்களாலும் தண்டஞ் சமர்ப்பித்தார் இளைய பெருமாள்” என்று முன்னிரண்டு அடிகட்குக் கருத்து அளிப்பர் என்பர் வை. மு.கோ.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then Ilakkuvaṉ walked three times
  2. around the noble one, keeping him on his right, and, with mighty Vīṭaṇaṉ,
  3. rich in ancient wisdom, following close behind,
  4. entered the field which that one had entered.

What the poem says

Ilakkuvaṉ takes leave of Irāmaṉ by circling him three times, the respectful circumambulation offered to a revered elder or deity, and sets out for the battlefield where Atikāyaṉ has appeared. The wise and strong Vīṭaṇaṉ follows him.

The commentary explains the threefold circling as homage offered with mind, speech and body, expressing the younger brother's complete dependence on Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ak kālai ilakkuvaṉ āriyaṉai
muk kālum valam koṭu mūtuṇarviṉ
mikkāṉ aṭal vīṭaṇaṉ mey toṭarap
pukkāṉ avaṉ vantu pukunta kaḷam.