கம்பராமாயணம் 7861 · யுத்த 17.90

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாம் இடித்து எழும் பணை முழக்கும் சங்கு இனம்
ஆம் இடிக் குமுறலும் ஆர்ப்பின் ஓதையும்
ஏம் உடைக் கொடுஞ் சிலை இடிப்பும் அஞ்சி தம்
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே.

பொருள் · Meaning in Tamil

தாம் இடித்து எழும் பணை முழக்கும் - தாம் அடிக்கப் படுவதால் எழுந்த போர் முரசின் ஒலியும்; சங்கு இனம் ஆம் இடிக் குமுறலும் - சங்குகளின் தொகுதிகளில் இருந்து தோன்றுகின்ற இடிபோன்ற குமுறலும்; ஆர்ப்பின் ஓதையும் - (வீரர்கள்) ஆர்த்தலால் தோன்றிய ஓசையும்; ஏமுடைக் கொடுஞ் சிலை இடிப்பும் - பாதுகாவல் உடைய கொடிய வில்லின் (நாணைத் தெறித்தலால்) உண்டான ஓசையும்; அஞ்சி - (ஆகிய பேரொலிகளுக்கு) அஞ்சி; மகர வேலையே தம் வாய் மடித்து ஒடுங்கின - மகர மீன்களைக் கொண்டுள்ள கடல் தம் வாயை மடித்துக் கொண்டு ஒடுங்கின.

பிற ஓசைகளுக்குக் கடலின் ஒலி குறைந்து விட்டதை கடல் அவ்வோசைகளைக் கேட்டு அஞ்சி வாய் மூடி ஒடுங்கியது எனக் கற்பனை செய்கிறார் கம்பர். ஏதுத் தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The roar of war drums rising as they were beaten, the thunder-rumble
  2. of the massed conches, the din of battle cries,
  3. and the twang of cruel, guarding bows so terrified
  4. the seas full of makaras that they shut their mouths and shrank away.

What the poem says

The noise of battle is overwhelming: drums, conches, war cries and the snap of bowstrings. Next to it the ocean's own roar can no longer be heard.

The poet imagines a reason for this: the sea, home of the makara sea monsters, has been frightened into silence, folded its lips and cowered. This is the figure of fancied cause, in which the poet invents a cause for a natural fact.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tām iṭittu eḻum paṇai muḻakkum caṅku iṉam
ām iṭik kumuṟalum ārppiṉ ōtaiyum
ēmuṭaik koṭuñ cilai iṭippum añca tam
vāy maṭittu oṭuṅkiṉa makara vēlaiyē.