கம்பராமாயணம் 7863 · யுத்த 17.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வானரம் - குரங்குக் கூட்டங்கள்; கிட்டின கிளை நெடுங்கோட்ட - பொருந்திய மரக் கிளைகள் ஆகிய பெரிய கொம்புகளையும்; கீழ் உகு மட்டின அருவியின் மதத்த - கீழே சிந்துகின்ற தேனையுடையனவாகிய அருவியாகிய மதநீரையும்; நெடுவரை விட்டன - (உடையனவாக) நீண்ட மலைகளை எறிந்தன; முகத்தில் வீழ்வன - அம் மலைகள் போர் முகத்தில் வீழ்வனவாயின; வேழம் வேழத்தை முட்டின ஒத்தன - (அக்காட்சி) யானை யானையொடு மோதியதை ஒத்து விளங்கின.
கிட்டுதல் - பொருந்துதல் (அல்) நெருங்குதல். மட்டின - தேனை உடையன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With close-set branches for long tusks, and with waterfalls
- running with honey for streams of rut,
- the tall hills the monkeys hurled, falling on the battle front,
- looked like elephants charging into elephants.
What the poem says
The monkeys tear up whole hills and throw them at the enemy elephants. Each hill, bristling with tree branches like tusks and streaming with honey-laden waterfalls like the ichor that flows from an elephant in rut, looks like an elephant itself. When it strikes, it is as if elephant were colliding with elephant.