கம்பராமாயணம் 7866 · யுத்த 17.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தோல் படத் துகைந்து எழு - யானைகள் அழியும்படி விரைவாக எழுந்த; வயிரத் தூண் நிகர் கால்பட - வயிரத் தூணைப் போன்ற (வானரர்களின்) கால்படுவதாலும்; கைபட - (வலிய) கை படுவதாலும்; கால பாசம் போல் வால்பட - இயமனது பாசம் போன்ற வால் படுவதாலும்; நிருதர் புரண்டனர் - அரக்கர்கள் பூமியில் புரண்டனர்; மற்று அவர் வேல் படப் - அந்த அரக்கர்களுடைய வேல் படைகள் பட்டதனால்; கவியின் வீரரே புரண்டனர் - வானர வீரர்கள் (அடிபட்டுப் பூமியில் விழுந்து) புரண்டனர்.
தோல் - யானை, பாசம் - கயிறு. மற்று - அசை. ஏகாரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Struck by feet like diamond pillars that rose to trample the elephants,
- struck by hands, struck by tails
- like the noose of Death, the demons rolled on the ground; and in turn,
- struck by their spears, the monkey heroes rolled.
What the poem says
The fighting goes both ways. The monkeys' legs, hard as pillars of diamond, their powerful hands and their tails, which lash like the noose of Kālaṉ (Yama, god of death), send the demons tumbling. But the demons' spears in turn bring down many of the monkey warriors.