கம்பராமாயணம் 7867 · யுத்த 17.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விரவின கவிக்குலம் - கலந்து தொக்க குரங்குக் கூட்டங்கள்; மரவமும் - மரங்களையும்; சிலையொடு மலையும் - கற்களோடு மலைகளையும்; வாள் எயிற்று அரவமும் - கூர்மையான பற்களை உடைய பாம்புகளையும்; கரிகளும் - யானைகளையும்; பரியும் - குதிரைகளையும்; அல்லவும் - இவைகளல்லாத பிறவற்றையும்; விம்மலால் வீச - மிகுதியாக வீசி எறிய; உம்பரே - மேலிடமாகிய ஆகாயமானது; உரவரும் கான் எனப் பொலிந்தது - வலிமை மிக்க காடு போல் விளங்கியது.
சிலை - கல், விரவின - கலந்து தொக்க, விம்மல் - மிகுதி. உம்பர் - ஆகாயம். உவமை அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Trees, and rocks and hills, and serpents
- with sword-sharp fangs, elephants, horses and all else
- the massed monkeys flung in such abundance
- that the sky above shone like a mighty forest.
What the poem says
The monkeys throw everything they can grab: trees, boulders, whole hills, fanged snakes, and even enemy elephants and horses. So much is hurled through the air at once that the sky looks like a dense, wild jungle filled with trees, rocks and animals.